நீங்கள் எப்போதாவது ஒரு கூட்டத்தில், ஒரு சிறந்த யோசனை உங்களிடம் இருந்தும் அதை எல்லோர் முன்பும் தெரிவிக்க தயங்கி இருக்கிறீர்களா? அல்லது பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக ஒரு நல்ல நட்பாக இருந்திருக்கக் கூடியவற்றிலிருந்து நீங்கள் உங்களை விலக்கி கொண்டுள்ளீர்களா? நம்முடைய கூச்சம், அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை நம்மைத் தடுத்து நிறுத்தி, நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நமக்கு சாத்தியமான நமது முழு திறன்களையும் அடைவதைத் தடுக்கலாம். பலர் முன்பு பேசுவது அல்லது மற்றவர்களை அமைதியாக அணுகுவது போன்ற சூழ்நிலைகளை கையாளக்கூடிய மற்றவர்களை நாம் காணும் போது, நாமும் அவர்களைப் போலவே இருக்க விரும்புகிறோம். இருப்பினும், இந்த குணங்கள் நம்மிடம் இல்லையெனில், அவற்றை நாம் எப்போதாவது வளர்த்துக் கொண்டு மற்றவர்கள் அளவுக்கு திறமையோடு இருப்போம் என்று நம்புவது கடினம். பலர் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். மேலும் பல கட்டுரைகள், சுய உதவி புத்தகங்கள், படிப்புகள் போன்றவை மக்களுக்கு இப்பிரச்சனைகளை கடக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்வுகளில் சில சிக்கலானவையாகவும் இருக்கலாம். இருப்பினும், கூச்சம், அச்சங்கள், பாதுகாப்பின்மையை உணர்வது மற்றும் பலவற்றைத் தீர்க்க, சில வரிகளைத் திரும்பத் திரும்ப சொல்வது போன்ற ஒரு எளிய நுட்பம் மிக உதவியாக இருக்கும் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. இது A3 சுய ஆலோசனை முறையாகும். இந்த கட்டுரையில், இந்த சுய ஆலோசனை முறையைப் பற்றிய இன்னும் பல விவரங்களையும், அதை ஒருவர் எவ்வாறு தடைகளையும் மற்றும் பிற எதிர்மறை ஆளுமைப் பண்புகளையம் நீக்கப் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கியுள்ளோம்.